ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை

0
40

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.

2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, சூரி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது.

இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here