சசிகலா வேடத்தில் நடிக்கும் ப்ரியா மணி

0
12

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை பிரியாமணி சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றது கூடுதல் தகவல் ஆகும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here