நான் எதுக்குமே பெருமைப்படல – சமந்தா அக்கினேனி !

0
10

நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். அதுதான் எனது பலம் என்கிறார் நடிகை சமந்தா அக்கினேனி.

ஒவ்வொரு படமும் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுக்கும். சினிமாவை ஒரு தொழிலாகவோ, வெற்றி தோல்வியை வைத்தோ பார்க்க மாட்டேன். நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது. அதை பார்த்து பெருமை கொள்ளவில்லை.

ஆனால் நடிகர் சூர்யாவுடன் நடித்தபோது மட்டும் பெருமைப்பட்டேன். கல்லூரியில் படித்த காலத்தில் நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவரோடு நடித்தது பெருமையான விஷயம்.

சவால்கள் எனக்கு பிடிக்கும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் பொருந்துவேன் என்று முத்திரை குத்தினர். அந்த இமேஜை உடைக்க வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து உழைத்தேன்.

அந்த முயற்சியும், உழைப்பும் இவ்வளவு தூரத்துக்கு கொண்டு வந்து இருக்கிறது. பணத்தை குறிக்கோளாக வைத்து நடிக்கவில்லை.

எனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே வேலை செய்தேன்.

சினிமா துறையில் கதாநாயகிகளாக கொஞ்ச காலம்தான் நீடிக்க முடியும்.

ஆனால் நான் 10 வருடங்களாக நிலைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here