இன்னைக்கும் அந்த பழக்கம் ஏன்ட இருக்கு ! சாய் பல்லவி ப்ளிச்

0
17

மல்லுவுட்டில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி கோத்தகிரி பொண்ணு தான்.

இவங்க, இன்னைக்கு இருக்கிற தென்னிந்திய சினிமா வட்டாரத்துல இயக்குனர்களால் தவிர்க்க முடியாத நட்சத்திரம்.

சமீபத்துல இவங்க கொடுத்திருக்கிற ஒரு பேட்டி இவங்களுடைய பக்குவமான அனுபவத்தையும் அவங்ககிட்ட இருக்கிற நல்ல பழக்கத்தையும் வெளிப்படுத்திருக்கு.

சாய் பல்லவி பேசும் போது :- ‘வாழ்க்கையில் நினைத்தது நடக்காமல் போனாலோ அல்லது செய்த வேலைக்கு எதிர்மறையான பலன்கள் கிடைத்தாலோ நிராசைக்கு ஆளாவது உண்டு. நான் அதை வேறு கோணத்தில் பார்ப்பேன். ஏதாவது நடக்க வேண்டும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. எந்த மாதிரி பிரச்சினை வந்தாலும் அதில் இருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, இந்த மாதிரி ஆகி விட்டதே என்று சோர்ந்து போக கூடாது.

படிக்கிற காலத்திலேயே எது வந்தாலும் இது நம் நல்லதுக்குத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக்கொண்டேன். அந்த பழக்கம் இப்போது சினிமா துறையில் எனக்கு உதவியாக இருக்கிறது. இங்கேயும் ஏதாவது தவறு நடந்தால் நமக்கு கற்றுக்கொடுக்கத்தான் நடந்து இருக்கிறது என்று நினைப்பேன்.

சினிமாவில் நடிகையாக இருப்பது குறுகிய காலம்தான். நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று தெரியாது. ஆனால் நடிக்கிற காலத்தில் ஒவ்வொரு புதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்’ என்றார்.

சாய் பல்லவி, ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கிற ஒரு நல்ல டாக்டர் என்பது மேலதிக தகவல்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here