அரசியலில் விஜய்க்கு வழிவிடுங்கள்.. ரஜினி-கமலிடம் மறைமுகமாக அரசியல் பேசிய அப்பா எஸ்ஏசி

0
89

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கவந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடந்தது.

முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல் ஒரே மேடையில் வந்தது ரசிகர்களை கவர்ந்தது. விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரும் விழாவுக்கு வந்திருந்தார்.

மேடையில் அவர் பேசும்போது திடீரென அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். “கமல் தைரியமாக அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினியும் அவரை போல அரசியலுக்கு வரவேண்டும். தயவு செய்து எங்களை ஏமாத்திடாதீங்க. நீங்க இருவரும் சேர்ந்தால் தமிழகத்திற்கு நல்லது, தமிழர்களுக்கும் நல்லது. என் ஆசை இது” என கூறினார்.

அதன்பிறகு நீங்கள் தம்பிகளுக்கு வழி விட வேண்டும் என கூறினார் SAC. விஜய்க்கு வழிவிடவேண்டும் என்பதை தான் அவர் இப்படி மறைமுகமாக கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here