RRR பட ஷூட்டிங் வீடியோ லீக் ஆனதால் அதிர்ச்சியில் ராஜமௌலி

0
20

பாகுபலி படங்கள் பிரம்மாண்ட வசூல் குவிந்த நிலையில் அதற்கு அடுத்து ராஜமௌலி இயக்கிவரும் RRR படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஷூட்டிங் சென்ற வருடம் துவங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் யாரோ கசியவிட்டுவிட்டனர். இதை பார்த்து ராஜமௌலி அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த வீடியோவில் ஜூனியர் என்டிஆர் கிராமத்து வேடத்தில் உள்ளார். காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

இணையத்தில் இருந்து அந்த விடியோவை நீக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அந்த வீடியோ மேலும் மேலும் பரவி வருகிறது.

li

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here