ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் யூடியுப்பில் ரிலிஸ்

0
10

இயக்குனர் ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் இப்படத்தின் டைட்டில் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புதுவிதமாக அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here