எனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்

0
37

பொள்ளாச்சியைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பையனான ரகு (தனுஷ்), சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கும்போது அங்கே படப்பிடிப்பிற்காக வரும் நடிகை லேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள்.

ஆனால், லேகாவை வளர்த்த குபேரன் (செந்தில் வீராசாமி), அவளைத் தொடர்ந்து நடிக்க வைத்து, பணம் சம்பாதிக்க விரும்புகிறான். லேகாவை மும்பைக்கும் அழைத்துச் சென்றுவிடுகிறான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ரகுவை அழைக்கும் லேகா, ரகுவின் சகோதரன் திரு (சசிகுமார்) ஆபத்தில் இருப்பதாகச் சொல்கிறாள். மும்பைக்குச் செல்கிறான் ரகு.

ரகு ஏன் மும்பைக்குச் செல்கிறான், லேகாவுக்கும் திருவுக்கும் என்ன தொடர்பு என்பதையெல்லாம் பல சண்டைகள் கொலைகளுக்குப் பிறகு சொல்கிறார் இயக்குநர்.

கதாநாயகனை நோக்கிப் பாயும் தோட்டாவிலிருந்து ஃப்ளாஷ் பேக்கில் செல்கிறது கதை.

முதலில் கதாநாயகியுடனான காதல், அதிலிருந்து துவங்கும் பிரச்சனைகள் என்று மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்கிறது கதை.

பல பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும் படத்தில் ஒரு கட்டத்தில் கதாநாயகியை நான்கு வருடங்கள் பிரிந்திருந்து மீண்டும் சேரும்போது பல பிரச்சனைகளைச் சந்திப்பார் கதாநாயகன்.

கிட்டத்தட்ட , சிம்பு நடித்து 2016ல் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இரட்டைப் பிறவி போல இருக்கிறது எனை நோக்கி பாயும் தோட்டா.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here