அந்த மாதிரி காட்சிகள் வைத்தால் இயக்குனரை சும்மா விட மாட்டேன் -ராஷி கன்னா

0
39

கோலிவுட்டில் ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, தற்போது சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கிறார்.

எல்லோரும் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தை பார்த்து கவர்ச்சியில் எல்லை மீறி இருக்கிறீர்களே இது உங்களுக்கு தேவையா என்று கேட்கின்றனர்.

கதாநாயகியாக முக்கிய இடத்துக்கு போய் விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கிற படங்கள் எனது கதாபாத்திரம் மூலமாக எனக்கு ஒரு மரியாதையை கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமான இருக்கிறேன்.

கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன். பெண்கள் கதாபாத்திரங்களை இழிவுபடுத்தி காட்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார் ராஷி கன்னா.

மேலும் கவர்ச்சியில் எல்லை மீறும் அந்த மாதிரியான காட்சிகள் வைத்தால் பெண்களை இழிவுபடுத்தும் இந்த காட்சி தேவையா, என்று இயக்குனர்களிடம் நேரடியாகவே கேட்டு விடுவேன்.

சில நேரம் எனது கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். சில நேரம் கதைக்கு தேவை என்று வாக்குவாதம் செய்வார்கள். எது எப்படி இருந்தாலும் எனது கருத்தை சொல்லாமல் இருக்க மாட்டேன்” என்று ராஷி கன்னா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here