இதற்கான கணக்குலாம் ஏன்ட இல்ல – ராணி முகர்ஜி பதில்

0
22

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, ‘ஹேராம்‘ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர்.

பாலிவுட்டில் இவர் நடித்த “மர்தானி2” என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மும்பையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, சினிமாவுக்கு வந்த புதிதில் தவறாக நடந்து கொண்டவர்களிடம் இருந்து எப்படி உங்களை பாதுகாத்து கொண்டீர்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராணி முகர்ஜி, “என்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களை கன்னத்தில் அறைந்துள்ளேன். நான் துர்கா தேவியை பார்த்து வளர்ந்தவள். எனவே குழந்தையாக இருந்தபோதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அறைந்திருக்கிறேன்.

நான் பலரின் கன்னங்களை பழுக்க வைத்திருக்கிறேன். இதற்கான கணக்கு என்னிடம் இல்லை” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here