ரம்யா பாண்டியனின் அன்பு வேண்டுகோள்

0
14

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சிலர் அலட்சியமாக வெளியில் செல்கின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் தீவிரத்தை உணர்த்த தற்போது திரையுலக பிரபலங்கள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜோக்கர், ஆண் தேவதை படங்களின் நாயகி ரம்யா பாண்டியனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொடூர வைரஸ்.

இதன் பரவலை ஒருவர் நினைத்தாலோ அல்லது அரசாங்கம் நினைத்தால் மட்டுமோ தடுக்க முடியாது.நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

எனவே எல்லோரும் வீட்டிலேயே இருங்கள். கடினமாக இருந்தாலும் இதனை நாம் செய்து தான் ஆக வேண்டும். இதுதான் இப்போது நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here