அண்ணாத்த படப்பிடிப்பில் திடீர் மாற்றம் !

0
21

சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

இரண்டு கட்ட படப்பிடிப்புகளை அங்கு முடித்து, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநில படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முழு படப்பிடிப்பையும் அங்கேயே முடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here