ரஜினி இப்படியொரு மோசமான விஷயத்தை செய்தாரா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

0
106

நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கி தருவதாக கூறியிருந்தார்.

அதை நிறைவேற்றும் விதத்தில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஒரு மூன்று பெட்ரூம் வீட்டை வாங்கி கொடுத்துள்ளார். சமீபத்தில் அந்த வீட்டுக்கு வந்து விளக்கு ஏற்றிவைத்தார் ரஜினி.

ஆனால் அந்த வீட்டை ரஜினியின் மனைவி லதா பெயரில் பதிவு செய்திருப்பதாகவும், கலைஞானம் உயிரோடு இருக்கும் வரை அந்த வீட்டில் இருந்துகொள்ளலாம் என ரஜினி சொன்னதாக வதந்திகள் பரவியது.

இது பற்றி கலைஞானத்திடம் கேட்டதற்கு அதை மறுத்துள்ளார். என் விருப்பப்படி என்னுடைய குடும்ப உறுப்பினர் பெயரிலேயே ரஜினி வீட்டை பதிவு செய்து கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here