தர்பாரை தெலுங்கில் பிரபலப்படுத்த தீவிர முயற்சி

0
20

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழைப்போலவே தெலுங்கு, இந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.
குறிப்பாக, ரஜினியின் பேட்ட படம் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

அதனால் இந்த முறை தர்பார் தெலுங்கு பதிப்பை வெளியிடும் தில்ராஜூ, மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் தர்பாரை வெளியிட்டு வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

அதனால் வருகிற 3-ந்தேதி படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை பெரிய அளவில் ஐதராபாத்தில் நடத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here