ரஜினி படத்தில் இணைந்த அஜித் பட நடிகர்!

0
33

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், மலையாள நடிகர் பாலாவும் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்குமாருக்கு நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here