ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் 3 காதல் ஜோடி

0
217

விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு பெரிய ஹிட் அடித்த சீரியல் ராஜா ராணி. அந்த சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் நிஜ வாழ்க்கையிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பல மாதங்கள் முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்ட அவர்கள் சமீபத்தில் தான் அதை அறிவித்தனர்.

ராஜா ராணி 2 எடுக்கப்போவதாக இயக்குனர் பெனெட் கூறியிருந்தார். அதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் விஜய் டிவி தற்போது ராஜா ராணி 2வது சீசன் சீரியலில் நடிக்க கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் பிக்பாஸ் 3 ஷோவில் மிக நெருக்கமாக இருந்தனர். காதல், திருமணம் உள்ளிட்டவை பற்றியும் அவர்கள் பேசினார். அந்த கெமிஸ்ட்ரியை பயன்படுத்தி ராஜா-ராணி சீரியலில் அவர்களை நடிக்கவைத்தால் மக்களை அதிகம் கவரலாம் என விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

ராஜா ராணி 2 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்றுதான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here