ஹாப்பி பர்த்டே அழகே..! பிரபல நடிகைக்கு வாழ்த்து கூறிய ரகுல் ப்ரீத் சிங்

0
20

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகரான நாகர்ஜூனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹாப்பி பர்த்டே அழகே சமந்தா.. இந்த உலகில் இன்பமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். உறுதிப்பாட்டிலும், நேர்மறை சிந்தனையிலும் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள். நிறைய அன்புடன் பிரகாசித்துக் கொண்டிருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here