அய்யய்யோ … தப்பு செஞ்சு வருத்தப்படுற ரகுல் ப்ரீத் !

0
23

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறாராம்.

இதற்கான காரணத்தையும் ரகுல் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது, நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போதுதான் புரிகிறது என்கிறார்.

இதுகுறித்து ரகுல் மேலும் தமிழ் சினிமா செய்தியாளரிடம் பேசிய போது, தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு பிரச்சினை கொடுத்தது இல்லை.

சம்பள விஷயத்தில் கூட விட்டு கொடுத்தேன். யாருடனும் தகராறு செய்தது இல்லை. படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து விடுவேன்.

இவ்வளவு இறங்கியும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான்.

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்காமல் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து விட்டேன். அதனால்தான் படங்கள் குறைந்து விட்டன. இப்போது சைவமாக மாறி விட்டேன்.

திடீரென்று சைவத்துக்கு மாற முடிவு செய்து அதை கடுமையாக கடைபிடித்து வருகிறேன். மும்பையில் படப்பிடிப்பு என்றால் எனது வீட்டில் இருந்து வரும் சைவ உணவை சாப்பிடுகிறேன். பழங்கள் பழச்சாறுகள் சாப்பிடுகிறேன்.

இந்தியாவில் எங்கு இருந்தாலும் சைவ உணவு கிடைத்து விடும். ஆனால் வெளிநாடுகளில் உடனடியாக சைவ உணவு கிடைப்பது இல்லை.
எனது குழுவில் யாருக்கு சைவ உணவு கிடைத்தாலும் அதை எனக்கும் கொடுத்து பசியை தீர்த்து விடுகிறார்கள் என்று ரகுல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here