சைக்கோ திரைவிமர்சனம்

0
342

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஸ்டைலில் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் மிஷ்கினின் த்ரில்லர் படங்களில் சைக்கோவும் இணைகிறது.

தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர்.

இந்த வழக்கை சில வருடங்களாக ராம்(இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் காவல்துறையே என்ன செய்வது என்று தெரியாம் முழி பிதுங்கி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் அதிதி ராவ்-யை உதயநிதி ஒருதலையாக காதலித்து வர, ஒரு நாள் திடீரென்று அதிதியும் அந்த சைக்கோவால் கடத்தப்படுகின்றார்.

இதனால் போலிஸிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் வேகம் எடுக்காமல் இருக்க, உதயநிதியே இந்த வழக்கை முன்பு விசாரித்து, பின் தன் உடல்நலக்குறைவால் வேலையில்லாமல் இருக்கும் நித்யா மேனன் உதவியுடன் அதிதி ராவ்-யை அந்த சைக்கோவிடமிருந்து மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

மிஷ்கின் படம் என்றாலே நடிகர் நடிகைகள் அனைவரின் பாவனைகளில் மிக்‌ஷினே தான் தெரிவார், அந்த வகையில் கண் தெரியாதவராக உதயநிதி மிகவும் மெனெக்கெட்டுள்ளார், அப்படியே கண் தெரியாதவர்கள் வாழ்க்கையை பிரதிப்பலித்துள்ளார், அவருக்கு பக்க பலமாக சிங்கம்புலியும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷ்னல் என ஸ்கோர் செய்துள்ளார்.

ராம் போலிஸ் அதிகரியாக பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், உனக்கு ஹோப் கொடுக்க தான் என்னை இங்க கொண்டு வந்துள்ளார்கள் என்று அதிதியிடம் சொல்லி தூதுவன் போல் வந்து செல்கின்றார்.

படத்தில் சைக்கோவாக வரும் இளைஞன் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பதபதக்க வைக்கின்றது,
அதிலும் கிளைமேக்ஸில் சர்ச் செட்டப்பில் தனக்கு நடந்ததை அவர் சொல்லும் காட்சி, எல்லோரையும் கலங்க வைக்கின்றது.

நித்யா மேனன், உதயநிதி இருவரும் தங்களுக்கு ஒரு குறை இருந்தும், அதை குறையாக பார்க்காமல் இயல்பாக கடந்து செல்ல நினைப்பது, அதிலும் துவண்டு இருக்கும் நித்யாவை கண்ணத்தில் அறைந்து அவரை மீட்டுக்கொண்டு வரும் உதயநிதி, போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

படத்தில் கண்ணுக்கு தெரியாத ஹீரோக்கள் என்றால் பிசிஸ்ரீராம்
ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் தான்!

அதுவும் ஒரு காட்சியில் உதயநிதி கார் ஓட்ட, நித்யா மேனன் வழி சொல்வது போல் வருவது, நாமே காரில் உட்கார்ந்து பயணித்த அனுபவம், லைட் வெளிச்சத்தில் பாதைகள் மறைவது போல் காட்டிய காட்சி எல்லாம் செம்ம,
இவர்கள் எல்லோரையும் விட அனைவரையும் மிஞ்சி, மிரட்டியது என்றால் இளையராஜாவின் பின்னணி தான், பதட்டத்தின் உச்சிக்கு நம்மை காட்சிக்கு காட்சி அழைத்து செல்கின்றது.

மொத்தத்தில் சைக்கோ … நம்மை பயம் கொள்ள வைக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here