ஹீரோ இயக்குனரின் அடுத்த படம்.. முன்னணி ஹீரோ நடிக்கிறார்

0
25

தமிழ் சினிமாவுக்கு கதை திருட்டு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி பல இயக்குனர்கள் இந்த சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

அட்லீயை தொடர்ந்து தற்போது ஹீரோ பட இயக்குனர் பி எஸ் மித்ரன் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது பற்றி கோலிவுட் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

ஆம்.. அவர் அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்தில் உள்ளார். அவர் விரைவில் மித்ரன் இயக்கத்தில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here