சம்பளம் தர சிரமமாயிருக்கு – நயன்தாரா குறித்து தயாரிப்பாளரின் கொந்தளிப்பு

0
182

கோலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைக்கும் தயாரிப்பாளர் கே.ராஜன், நயன்தாரா பற்றி பேசியுள்ளார்.

கே.ராஜன் கூறும்போது, “கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தயாரிப்பாளர் ‘பேட்டா’ கொடுக்க வேண்டி உள்ளது. இதன்மூலம் தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே மாதிரி படி கொடுக்க வேண்டியுள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here