சமந்தாவுடன் ஏன் நடிக்கவில்லை? பிரபாஸ் விளக்கம்

0
26

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா ஆகியோருடன் நடித்துள்ளார். ஆனால் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உள்ள சமந்தாவுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை.

முன்னதாக சாஹோ படத்தில் சமந்தா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், ஏன் சமந்தாவுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற காரணத்தை பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் உள்ள உயரத்தின் வேறுபாடு தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். பிரபாஸின் உயரம் 1.83 மீ, சமந்தாவின் உயரம் 1.58 மீ ஆகும். பிரபாஸ் கூறிய இந்த காரணத்தை கேட்டு இரண்டு பேரின் ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணா குமாரின் பெயரிடப்படாத படத்திலும், சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here