பவர் பாண்டி 2 விரைவில் … இதுல இன்னொரு விசயமும் இருக்கு !

0
16

2017-ம் ஆண்டு ‘ப.பாண்டி’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார் தனுஷ்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘ப.பாண்டி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ்.

அதில் ராஜ்கிரண் மற்றும் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு இயக்குநர் ஆசையைத் தள்ளி வைத்திருக்கிறார் தனுஷ்.

தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, ‘ப.பாண்டி 2’ படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here