பிகில் படம் ரிலீஸ் இல்லை.. முக்கிய தியேட்டர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்! என்ன பிரச்சனை?

0
1714

விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகின்றன.

இரண்டு படங்களும் முன்னபதிவு துவங்கி பரபரப்பாகி போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல தியேட்டர்கள் பிகில் படத்தை போட அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம் அந்த படத்திற்காகத்தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

ஆனால் சென்னையில் முக்கிய தியேட்டர்களில் ஒன்றான போருர் ஜிகே சினிமாஸ் பிகில் படம் எங்கள் தியேட்டரில் ரிலீஸ் இல்லை என கூறியுள்ளனர்.

அதிக விலைக்கு டிக்கெட் விற்க விநியோகஸ்தர் போடும் கண்டிஷன்களை ஏற்க முடியாது என்பதால் இந்த முடிவு என கூறப்படுகிறது. அதனால் கைதி படத்தை மட்டும் அவர்கள் திரையிட உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here