மீண்டும் தமிழுக்கு திரும்பும் புட்ட பொம்மா ஹீரோயின்

0
20

தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் இடம் பெற்ற, புட்ட பொம்மா என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது.

பாடலை மிகவும் ரசித்த தமிழ் ரசிகர்கள், மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என பூஜா ஹெக்டேவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற பூஜா, விரைவில் தமிழ் படம் ஒன்றில் தன்னை காணலாம் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும், தன் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள அன்பிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here