பொன்னியின் செல்வனில் வைரமுத்து இருக்கிறாரா ? ஏ.ஆர்.ரகுமான் பதில்

0
14

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் ஜனவரி 6ல் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ‘தா பியூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கி உள்ளார்.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கும்மிடிப்பூண்டியில் அவருக்கு சொந்தமான ஒய்.எம் ஸ்டுடியோவில் நடந்தது.

அப்போது செய்தியாளர்களுக்கு ரகுமான் கூறியது, தமிழ் சினிமாவில் இப்போது பாடல் வரிகள் புரிவதில்லை என்ற கருத்து உள்ளது.

நல்ல பாடல்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

சில நேரம், நடனம் உள்ளிட்ட வி‌ஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக சில பாடல்கள் உருவாகலாம். அது போன்ற பாடல்களில் வரிகளை விட நடனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இடம்பெறுகிறாரா என்பதை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் தான் உறுதிசெய்ய வேண்டும்.

வைரமுத்து பணியாற்றுவது குறித்து படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here