அரசியல் பிரவேசம் குறித்து பேசிய பார்த்திபன்

0
14

கோவையில் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பு மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் நூல்களை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது திரைப்பட அனுபவம் மற்றும் படைப்புகள் குறித்து பேசினார்.

பின்னர் தான் அரசியலுக்கு வருவது குறித்தும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘சராசரி பிரஜைகள் எல்லோருக்கும் அரசியல் ஈடுபாடுகள் இருக்க வேண்டும். சினிமாவில் தன்னிறைவு அடைந்த பிறகு அரசியலுக்கு நிச்சயமாக வருவேன்.

ரஜினி, கமலே இப்போது தான் அரசியலுக்கு வந்து பெரிய போராட்டத்தில் உள்ளனர். நடுவில் நான் ஒரு போட்டியாக வர வேண்டாம் என்று எண்ணுகிறேன்.

அரசியலை வைத்து அரசியல் செய்வது இப்போது அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரு புதிய குழப்பத்தை நான் உண்டாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here