ஜெ.,வை தள்ளிவிட்ட காட்சிகள் – தலைவி படப்பிடிப்பு விறுவிறு

0
23

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவத்தை தற்போது தலைவி படத்துக்காக காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். மறைந்ததும் அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுருந்தது.

அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் எம்.ஜி.ஆர். உடலை அலங்கரித்த வண்டியில் கடற்கரைக்கு எடுத்து சென்றபோது உடலின் அருகில் நின்றிருந்த ஜெயலலிதாவை கீழே இறக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. வண்டியில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டினர்.

அந்த சம்பவத்தை ராஜாஜி ஹாலில் அரங்குகள் அமைத்து படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, கங்கான ரெனாவத் நடித்துவருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here