போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அதிர்ச்சி போன் கால்.. விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

0
81

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஹிந்தியில் வெளியான ஹவுஸ்புல் 4 படத்தை விட பிகில் அதிகம் வசூலித்து இந்தியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதனால் உடனே விஜய்யின் வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தியுள்ளனர். சாலிகிராமத்தில் உள்ள வீடு மற்றும் இசிஆரில் உள்ள வீடுகளுக்கும் தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போன் செய்தவர் பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here