சென்சார் அதிகாரிகள் பாராட்டிய பிழை படம்

0
20

பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் எதிர்காலம் எவ்வாறு சிதையும் என்பதை மையமாக வைத்து ‘பிழை’ படம் உருவாகியிருக்கிறது.

சென்னை சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த படம் வரும் 3 ந்தேதி வெளியாகிறது. ராஜவேல் கிருஷ்ணா இயக்க, ஆர்.தாமோதரன் தயாரித்திருக்கிறார்.

சின்ன ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத், கோகுல், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், இளன் நடித்திருக்கின்றனர்.

படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:- பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள்.

சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி.

எனவே படம் சுவாரசியமாக எல்லோரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த காலகட்டத்துக்கு இது மிகவும் அவசியமான படம் என்று பாராட்டியதுடன் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் கொடுத்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here