27 ஆண்டுகள் தனிமையில்.. இவரைப்போல் இருக்க வேண்டும் – பார்த்திபன்

0
175

கொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை, பிரதமர் நாடு முழுமைக்கும் பிறப்பித்தார். ஆனால் வீட்டினில் அடைந்து இருப்பது பெரும்பாலானோருக்கு சிரமமாக இருக்கிறது.

மக்கள் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், நெல்சன் மண்டேலாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் 27 ஆண்டுகள் தனிமை. குடும்பம் இல்லை, செல்போன் இல்லை, ஆடம்பரம் இல்லை. நம்பிக்கையுடன் கூடிய பார்வை மட்டுமே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காக போராடி, 27 ஆண்டுகள் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்ததை குறிப்பிட்டு, நாமும் அவரைப்போல் இந்த ஊரடங்கு நாட்களை வீட்டில் இருந்து கடக்க வேண்டும் என பார்த்திபன் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here