ஊரடங்கினால் ஏற்பட்ட நன்மை இது.. நடிகர் பார்த்திபன் கருத்து

0
44

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஊரடங்கினால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பல மது அருந்துவதை நிறுத்தியுள்ளனர்.

பல குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பலர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மக்கள் பலர் ஒழுக்கத்துடன் வாழ கொரோனா வழிவகுத்துள்ளது. மேலும் நான் உடற்பயிற்சி செய்து உடலை  வலுவாக வைத்துக் கொள்ளவும் இது வழி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here