வேதனை தரும் ஒத்த செருப்பு – பார்த்திபனின் கனவு நினைவாகல …

0
53

இயக்குனர் ரா.பார்த்திபன் தனது வித்தியாசமான கதைக்களங்கள் மூலமாக ரசிகர்களை கவர்பவர்.

கடந்த வருடம் இவரது இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் தென்னிந்திய சினிமா விருதுகளை வாங்கிக்குவித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஒத்தசெருப்பு ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது வேதனையாக இருக்கிறது என்று நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன் பேசியிருக்கிறார்.

மேலும் அவர் பேசும் போது:- மிகுந்த சிரமப்பட்டுத்தான் ஒத்த செருப்பு படத்தை எடுத்திருக்கிறேன். அந்தப் படத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்திருக்கின்றன. பல விருதுகளையும் அந்தப் படம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு, அந்தப் படம் அனுப்பப்படவில்லை. இது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here