அட்லீ வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.. பிகிலை மோசமாக விமர்சித்த பிரபலம்

0
129

அட்லீ படம் என்றாலே எப்போதும் கதை திருட்டு புகார் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்போது வந்துள்ள பிகில் படம் மீதும் அப்படி ஒரு குற்றச்சாட்டை சந்தித்துள்ளது.
தற்போது அட்லீ பற்றி பிரபல டிவி தொகுப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வம் மோசமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“யார் வேண்டுமானாலும் ஒரு கதையின் தழுவலை எடுக்கலாம், தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கையாளலாம், ஏன் பச்சையாக காப்பிகூட அடிக்கலாம். ஆனால் அமைதியாக இருந்திருக்கலாம். அட்லி ஒரு நல்ல assembler, பல படங்களின் கதையை ரசனைக்குறிய காட்சிகளை நேர்த்தியாக கோர்த்து அழகாக தருகிறார், ஆனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்திருக்கமாட்டார். என்னுடைய பெஸ்ட் ரைட்டிங், அண்ணனுக்காக பாத்து பாத்து பண்ணிருக்கேன்னு அளந்துவிட்டாரே அதுதான் பிரச்சனை.

படக்குழுவை தேர்வு செய்வது, நடிகர்களை மற்ற படங்களைக் காட்டிலும் அழகாக காட்டுவது, எங்கே எமோஷனல் காட்சிகளை வைத்தால் எப்படி கிளிக் ஆகும் போன்ற விசயங்களில் காட்டும் அக்கறையை கொஞ்சமேனும் கதைக்கும், காட்சிகளுக்கும் காட்டினால் அட்லிக்கு நல்ல இயக்குனர் என்ற வரிசையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். இப்படி காப்பி அடித்தே படம் எடுத்தால் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து முன்னணி வரிசையில் இருத்துகொண்டுதான் இருப்பார், ஆனால் நல்ல இயக்குனராக இருக்கமாட்டார்,” என பனிமலர் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here