ஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

0
14

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள்.

பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது.

தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு படத்தில் நவாஜூதின் சித்திக் நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது ஹாலிவுட்டிலும் ஒத்த செருப்பு படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்தை ஆங்கிலத்தில் எடுத்தால் நீங்கள் கொண்டாடப்படுவீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர்
கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த பார்த்திபன் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். அடுத்து பார்த்திபன் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு இரவின் நிழல் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த படத்தையும் பார்த்திபன் புதுமையாக இயக்க இருக்கிறார். அதாவது முழு படத்தையும் ஒரே ‘ஷாட்’டில் எடுக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here