விஜய் வாங்க வேண்டிய ஆஸ்கர், கொரிய படத்துக்கு கைமாறியதா ?

0
87

ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான பாராசைட் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் அப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த திரைபடத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம்
வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில், அப்படத்தின் கதை, விஜய் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here