நிகிஷா படேலின் லண்டன் சீக்ரெட் ! விரைவில் …

0
15

டோலிவுட்டில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த ‘புலி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிகிஷா படேல்.

குஜராத்தை பூர்விகமாக கொண்ட இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.

அழகுடன் கிளாமராகவும் நடிக்கத் தயங்காதவர். அதன் காரணமாக, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

தமிழில் ‘தலைவன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் தொடர்ந்து சில கன்னடப் படங்களிலும் நடித்தார்.

தொடக்க காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவே இல்லை. கதாபாத்திரங்களை விடவும் கிளாமருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆகவே, அவரால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்து இருக்கிறார். மீண்டும் லண்டனுக்கே சென்று தங்க போகிறார்.

இதற்கு முன் கைவசம் உள்ள ஏழு படங்களை முடிக்கும் வரை லண்டனுக்கும் சென்னைக்கும் போய் வருவாராம்.

அதன்பின் நிரந்தரமாக லண்டனிலேயே செட்டிலாகி அங்கு படங்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கவும் தீர்மானித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here