வெறுப்பை பரப்பாதீர்கள்.. ஜெயம் ரவி பட நடிகை ஆவேசம்!

0
11

முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான நிதி அகர்வால், ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்துள்ளார்.

இவர் வெறுப்புணர்வை யாரும் பரப்பாதீர்கள் என கோபமடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நிறைய பேர் வீட்டில் அமர்ந்துகொண்டு வெறுப்பை பரப்புகிறார்கள்.

இந்த நேரத்தில் நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய சில செயல்பாடுகளை நான் பட்டியலிட்டுள்ளேன். வீட்டை சுத்தம் செய்யுங்கள், உடற்பயிற்சி, தியானம், படம் வரையுங்கள், வீட்டில் சமையல் செய்யுங்கள், புத்தகம் படியுங்கள், புதிதாக சிந்தித்து எழுதுங்கள்,

செல்லப்பிராணிகள் இருந்தால் அவற்றுக்கு பயிற்சி கொடுங்கள் மற்றும் அவற்றுடன் நேரம் செலவிடுங்கள், தவறவிட்ட படங்களை பாருங்கள், புது திறனை அல்லது பழக்கவழக்கத்தை மேம்படுத்துங்கள், ஆன்லைனில் கோர்ஸ் படியுங்கள், உங்கள் வேலை சார்ந்த படிப்பினை படித்து முன்னேறுங்கள்.

யாருடைய பயணமும் உங்களுக்குத் தெரியாது, எனவே நீங்கள் உட்கார்ந்து முட்டாள்தனமான அறிக்கைகளைத் டைப் செய்வதற்கு முன்பு, ஒரு நேர்மறையான ஆளாக இருக்க பாருங்கள். யாருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு சூப்பர் சக்தி அல்ல’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here