புதிய அணியுடன் களமிறங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்

0
10

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் டி.சிவா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுபாப்பு அணி என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு கே.முரளிதரனும், 2 செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், ஜே.எஸ்.கே சதீ‌‌ஷ்குமார் ஆகியோரும், 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரே‌‌ஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமார், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபுகணே‌‌ஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

சென்னையில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here