கீர்த்தி சுரேஷ் நிராகரித்த கதையில் நயன்தாரா..

0
104

நடிகை நயன்தாரா எப்போதும் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் அவரது பெரும்பாலான படங்கள் வெற்றி வாகையும் சூடியுள்ளன.

இந்நிலையில் தற்போது நயன் ஒரு கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் என செய்தி வெளிவந்துள்ளது. தெலுங்கு நடிகர் ராணா ஒரு கொரிய படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதை தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் தயாரிக்க உள்ளார்.

முதலில் இந்த கதையை அவர் கீர்த்தி சுரேஷிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சில காரணங்களால் மறுத்துவிட தற்போது நயன்தாராவை தேடி சென்றுள்ளது அந்த வாய்ப்பு.

அந்த கொரிய படத்தை பார்த்த நயன்தாராவுக்கு அது அதிகம் பிடித்துவிட உடனே நடிக்கிறேன் என ராணாவிடம் ஒப்புதலை கொடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here