விலங்களுக்காக தன் ரசிகர்களுக்கு நமீதா போட்ட கட்டளை !

0
20

உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள் என்கிறார் நமீதா.

விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை நமீதா, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் அவ்வப்போது கருத்துக்கள் மூலம் மக்களை தொடர்புகொள்கிறார்கள்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள்.

தயவு செய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள் என்கிறார் நமீதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here