நான் சிரித்தால் திரை விமர்சனம்

0
101

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் தான் நான் சிரித்தால்.

இப்படத்தின் ஆரம்பத்திலேயே வினோத மனிதர்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றார். அதில் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை ஒவ்வொன்றாக பகிர்கின்றார்.

ஆம், ஆதிக்கு எந்த ஒரு சோகமோ, வலியோ எது என்றாலும் உடனே சிரிப்பு வந்துவிடும், இந்த சிரிப்பால் தன் காதலியை இழக்கின்றார், தன் வேலையை இழக்கின்றார். அந்த நேரத்தில் தன் நண்பர் டெல்லி பாபு தொலைந்து போன தகவல் அறிந்து ஆதி அவரை தன் மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார், அப்போது அதே ஏரியாவில் இருக்கும் டான் டெல்லி பாபுவை(கே.எஸ்.ரவிகுமார்) கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுகின்றனர்.

இந்த திட்டத்தில் தவறுதலாக ஆதி, ரவிகுமார் இருக்கும் இடத்திற்கு செல்ல, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

அறிமுக இயக்குனர் ராணா, தான் இயக்கிய குறும்படம் கெக்க பெக்க-வை அடிப்படையாக கொண்டு முழுத்திரைக்கதை அமைத்து நான் சிரித்தால் கதையை உருவாக்கியுள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி வழக்கமான தன் துறுதுறு நடிப்பால் அசத்த, அவருக்கு அப்பாவாக வரும் படவா கோபி லோக்கல் அப்பாவாக தர லோக்கலாக நடித்துள்ளார்.

அதேபோல் வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே காமிக் வில்லன் என்று சொல்லலாம், இதில் ரவிமரியா தான் ஸ்கோர் செய்கின்றார், அதிலும் கிளைமேக்ஸில் அவர் சிலை போல் இருக்கும் காட்சி சிரிப்பிற்கு கேரண்டி.

குறும்படமாக பார்க்க சூப்பராக இருந்தது, அதை முழுப்படமாக எடுக்கையில் வரும் ஒரு சில பிரச்சனைகள் தான் இப்படத்தின் மைனஸ், அதிலும் முனிஷ்காந்த் வந்துவிட்டார் இவர் சிரிக்க வைத்து விடுவார், ஷாரா வந்துவிட்டார் இவர் சிரிக்க வைத்துவிடுவார் என பார்த்து பார்த்து 10க்கு 3 காமெடி காட்சிகளே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

சுந்தர்.சி தயாரிப்பாளர் என்பதால் அவர் படத்திலிருந்தே காட்சிகளை எடுத்துவிட்டார்கள் போல, சுந்தர்.சி கிளைமேக்ஸ் போல் எல்லோரும் ஒரு இடத்திற்கு வர, ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றை தேடி வர, அங்கு நடக்கும் குழப்பம், கலாட்டா போன்றவை தான் ரசிக்க வைக்கின்றது.

மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களுக்கு பின்பு, ஆதி நடித்திருக்கும் நான் சிரித்தால், நம்மை சிரிக்க வைப்பது கொஞ்சமே !

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here