மூக்குத்தி, பக்தி படம் அல்ல ! உண்மையை உடைத்த நடிகை

0
31

எல்கேஜி படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், கோடை விடுமுறையில் நயன்தாரா அனைவருக்கும் அருள் பாலிப்பார் என பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

படப்பிடிப்பின் போது நயன்தாரா காலணி கூட அணியாமல் நடித்துக் கொடுத்தார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை ஸ்மிருதி அளித்த பேட்டியில் ’நீங்கள் நினைப்பது போன்று இந்தப்படம் அம்மன் புகழைப் பாடும் பக்தி படம் கிடையாது. இது ஒரு நகைச்சுவை படம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாரா குறித்து கூறுகையில், நயன்தாரா மிகவும் சிறந்த நடிகை. படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்.

அவர் பணிபுரியும் விதத்தை யாராலும் குறை சொல்ல முடியாது என்று லேடி சூப்பர் குறித்து புகழ் பாடியுள்ளார் நடிகை ஸ்மிருதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here