சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு இவ்வளவு மொழிகள் தெரியுமா ?

0
18

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ படம் உருவாகி வருகிறது.

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த தனா இயக்கி இருக்கிறார்.

‘வானம் கொட்டட்டும்‘ கதையை நானும், ராதிகாவும் கேட்டதும் பிடித்திருந்தது.

இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை பின்பற்றி வருகிறேன். இதுவே நான் சுறுசுறுப்பாக இயங்க காரணம் என்கிறார் சரத்குமார்.

மேலும் ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என்பது என் கருத்து.

ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் போது அவர்களின் மொழியில் பேசினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தனி தான்.

ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மொழி என்பது எளிமையான கருவி.

எனக்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும் என்று சரத்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here