மைக்கேல் ஜாக்சன் பயோ பிக்சர் : விரைவில் …

0
41

ஹாலிவுட்டில் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

தன்னுடைய வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்த அமெரிக்க பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார்.

பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார்.

கடந்த 2009-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்பு, மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இதற்கான உரிமையை போஹெமிய ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் வாங்கி இருக்கிறார்.

படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களில் உள்ள பாடல்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார்.

கிளாடியேட்டர், ஹூஹோ ஆகிய படங்களுக்கு கதை எழுதிய ஜான் லோகன், மைக்கேல் ஜாக்சன் படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். மைக்கேல் ஜாக்சன் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here