பைத்தியம் முத்திடுச்சி… போய் டாக்ட்டரை பாரு..! பிக்பாஸ் மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர்

0
253

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பதினாறு போட்டியாளர்களின் ஒருவராக வந்தவர் மீரா மிதுன்.

அவரது நடவடிக்கைகள் சர்ச்சை ஏற்படுத்தியதால் அவரை வீட்டில் இருந்து வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

வெளியில் வந்த அவர் தற்போதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒரு ரோலில் அவர் நடித்திருந்தாராம். அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டனர் என மீரா புகார் கூறினார்.

அதன்பிறகு அருன்விஜய்-விஜய் ஆன்டனி இணைந்து நடித்துவரும் அக்னிசிறகுகள் படத்தில் ஹீரோயினாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் தற்போது நீக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளனர் என மீரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் நவீன். “ஷாலினி பாண்டேவுக்கு பதிலாக தான் அக்ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீரா மிதுனை நாங்கள் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யவே இல்லை” என கூறினார்.
அதற்கு மீரா பதில் கூற வாக்குவாதம் வளர்ந்து நவீன் கோபத்தில் “நீ பெரிய பிரச்சனை இருக்கு. போய் டாக்டர பாரு” என சொல்லிவிட்டார்.


Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here