ஏமாற்றிவிட்டார்கள்.. சிவகார்த்திகேயனை தாக்கி பேசிய பிக்பாஸ் மீரா மிதுன்

0
244

பிக்பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மீதுன். இவர் அந்த ஷோவுக்கு செல்லும் முன்பே அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். அதனால் அவரை போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று விசாரணை நடத்தினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய மீரா மிதுன் கோபத்துடன் சொன்ன ஆடியோ ஒன்றும் லீக் ஆனது.

இந்த நிலையில் மீரா மிதுன் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். படத்தில் தன்னுடைய பல காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என மீரா தற்போது புகார் கூறியுள்ளார்.

படத்திற்காக 10 நாள் ஷூட்டிங், ஒரு பாடல் உட்பட பல காட்சிகளில் நடித்ததாகவும், ஆனால் அவற்றை நீக்கிவிட்டார்கள் என மீரா சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து வந்தவர் தான். முதலில் தமிழ் சினிமாவில் தொழில்முறை கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என மேலும் குறிப்பிட்டுள்ளார் மீரா.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here