மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததது பற்றி மனம் திறந்தார் மீனா !

0
24

கோலிவுட்டில் எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மீனா பேசியதாவது :- “ரஜினிகாந்துடன் நிறைய நடிகைகள் நடித்து இருந்தாலும் நான் குழந்தையாக இருந்தபோதே அவருடன் பேசக்கூடிய, நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அது இப்போது வரை தொடர்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று அவர் சொல்லி இருக்கிறார். இப்போது வரை எப்படி கொஞ்சம் கூட மாறாமல் இருக்கிறார் என்று புரியவில்லை.

நான் சின்ன வயதில் எப்படி பார்த்தேனோ, அப்படித்தான் இப்போதும் பேசுகிறார், பழகுகிறார். உண்மையிலே இது வியக்கத்தக்க ஆச்சரியம் என்கிறார் மீனா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here