எனது கேரியரில் மறக்கமுடியாத கதாபாத்திரம் அது தான் – நடிகை மீனா

0
38

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய திரைவாழ்வில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் குறித்து நடிகை மீனா தெரிவித்துள்ளார். வஸந்த் இயக்கிய ரிதம் படத்தில் சித்ரா எனும் கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று என அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

‘சித்ரா.. எனக்கு மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று. இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஐம்பூதங்களையும் சித்தரிக்கும். என்ன ஒரு அற்புதமான இசை ஆல்பம். எங்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில் வஸந்த் இயக்கத்தில் வெளியான ரிதம் படத்தில் அர்ஜுன், ஜோதிகா, மீனா, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here