ஐந்து மொழிகளில் வெளியாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

0
19

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், திரையுலகமும் முடங்கிப் போனது.

இதனால் மாஸ்டர் உட்பட பல படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக மாஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கைதி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் இது என்பதால், விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பு ரசிகர்களும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here